தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியாளர்களின் தரத்தை நெறிப்படுத்த புதிய மசோதா

பொறியாளர்களின் தரத்தை நெறிப்படுத்த புதிய மசோதா

பொறியாளர்களின் தரத்தை நெறிப்படுத்த புதிய மசோதா


UPDATED : ஜன 12, 2010 12:00 AM

ADDED : ஜன 12, 2010 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2010 12:00 AM ADDED : ஜன 12, 2010 01:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டம், சி.ஏ., ஆர்க்கிடெக்சர் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் போலவே 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளை முடித்தவர்கள் தற்போது பரிசீலனையிலுள்ள இந்தியன் கவுன்சில் ஆப் இன்ஜினியரிங் அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய மனித வள அமைச்சகம்
பரிசீலித்து வருகிறது.
 
நாடெங்குமுள்ள இன்ஜினியர்களின் தரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் இன்ஜினியர்ஸ் பில் 2009 என்னும் மசோதா விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி பொறியியல் படிப்பு முடிப்பவர்க்ள ஐ.சி.இ., அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது அங்கீகாரச் சான்றிதழ் பெற வேண்டும். பொறியியல் தொழில்நுட்பத்தை முறைப்
படுத்தும் முயற்சிகள் இதன் மூலமாக பலம் பெறும்.
 
அமைச்சகங்களுக்கிடையே பரிந்துரைக்காக சுற்றுக்கு விடப் பட்டுள்ள மனித வளஅமைச்சகக் குறிப்பில் இதன் மூலமாக பொறியியலாளர்களிடையே சமூகப் பொறுப்புணர்வையும் புதுமைகளையும் ஒருங்கே நிறுவ
முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வரையறையின் மூலமாக உலக அளவில் இந்திய பொறியியலாளர்களுக்கு சிறப்பான தரக்கட்டுப்பாடு மற்றும் மதிப்பை மேம்படுத்த முடியுமென்று துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவிலுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகள் தரம் வாய்ந்த இன்ஜினியர்களை உருவாக்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் இந்த அமைச்சகம் சார்பில் முன்மொழியப் பட்டுள்ளது. பொறியியல் துறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்னும் பல ஆண்டு கோரிக்கைகளின் விளைவே இந்த புதிய முயற்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us