UPDATED : ஜன 13, 2010 12:00 AM
ADDED : ஜன 13, 2010 12:43 PM
அ நிறம் | அளவு
இப்பள்ளியின் ஏழு முதல் பிளஸ் 1 வரை உள்ள 24 மாணவர்கள், இச்சாதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 10 மணிக்கு 300 மீ., நீளம், 9 செ.மீ., அகலம் உள்ள காகிதத்தில், ஒரே நேரத்தில் திருக்குறள், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்ச மூலம், நாலடியார் உட்பட பதினென் கீழ்கணக்கு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி பாடல்களை எழுதினர். இரவு 7 மணி வரை தொடர்ந்து எழுதியவற்றை, புத்தக வடிவில் தயாரித்து சாதனைக்காக அனுப்ப உள்ளனர். முதல்வர் கண்ணன், தமிழாசிரியர் செயம்கொண்டான் ஏற்பாடுகளை செய்தனர்.
