தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்

அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்

அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்


UPDATED : ஆக 23, 2023 12:00 AM

ADDED : ஆக 23, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2023 12:00 AM ADDED : ஆக 23, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
காலை சிற்றுண்டி திட்டம், வரும் 25ம் தேதி முதல், அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது என்று சமூகநலத்துறை அறிவித்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், சமூக நலத்துறை கமிஷனர் அமுதவள்ளி, காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஊட்டச்சத்து குறைபாடின்றி மாணவ, மாணவியர் பள்ளி கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில், காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை கண்காணித்து செயல்படுத்த, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமூக நலத்துறை கமிஷனர் அமுதவள்ளி கூறியதாவது: 
திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள, 76 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மட்டும், செயல்படுத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, மாவட்டத்தில் உள்ள, 1,081 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 12 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 251 ஊராட்சிகளில் இயங்கும், 797 பள்ளிகளில், 37 ஆயிரத்து, 18 மாணவ, மாணவியர்; 14 பேரூராட்சிகளின், 95 பள்ளிகளில் பயிலும், 4,555 மாணவ, மாணவியர்; ஆறு நகராட்சிகளில், 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ, மாணவியர்;பொது சமையலறை மூலமாக, நகர உள்ளாட்சிகளில் உள்ள, 10 பள்ளி களின், 784 மாணவ, மாணவியர்; மாநகராட்சியின், 120 பள்ளிகளில் பயிலும், 27 ஆயிரத்து, 477 மாணவ, மாணவியருக்கும், வரும் 25ம் தேதி முதல், காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.இதன் மூலம், மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு தொடக்கப் பள்ளி களிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, இரண்டாம் கட்டமாக, நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள, 1,081 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும், 75 ஆயிரத்து, 482 மாணவ, மாணவியருக்கும், காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.இவ்வாறு அமுதவள்ளி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us