தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் உதயமாகும் ‘ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்’

சென்னையில் உதயமாகும் ‘ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்’

சென்னையில் உதயமாகும் ‘ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்’


UPDATED : ஜன 15, 2010 12:00 AM

ADDED : ஜன 15, 2010 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2010 12:00 AM ADDED : ஜன 15, 2010 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட் குழுமம், ஆசிய நாடுகளின் உணவு பதார்த்தங்களை கற்று கொடுக்கும் வகையில் சென்னையில் கேட்டரிங் கல்வி நிறுவனத்தை துவக்க உள்ளது.


மெயின்லேண்ட் சீனா, ஓ!கல்கத்தா, சிக்ரீ, மச்சான் ஆகிய உணவு மையங்களை உள்ளடக்கிய ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட் குழுமம் இந்தியாவிலேயே முதல் முறையாக ஓரியன்டல் கேட்டரிங் கல்வி நிறுவனத்தை நிறுவ உள்ளது. தற்போது கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுவரும் ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ள உள்ளது.


அடுத்ததாக, சென்னையிலும் ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட் துவங்க இருப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் அன்ஜன் சட்டர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹால்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் துறையில் தேவைப்படும் மனிதவளத்தில், பாதியே தற்போதைய இந்திய கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இன்னும் தொழில் ரீதியாக உரிய தகுதி உள்ளவர்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. ஆசிய நாடுகளின் உணவு பதார்த்தங்களை சரியான முறையில் தயாரிக்க மாணவர்களை தயார்படுத்த ஓரியன்டல் கேட்டரிங் அண்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் துவங்கப்பட உள்ளது.


தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் உணவு பதார்த்தங்கள் தயாரிப்பது குறித்து இப்படிப்பில் கற்பிக்கப்படும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட உணவு தயாரிப்பு முறை அல்லது இதர பணிகளில் தங்களை வல்லுனர்களாக்கிக் கொள்ளலாம். ஓராண்டு சான்றிதழ், இரண்டாண்டு டிப்ளமோ மற்றும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு என பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். பல்கலைக்கழக அனுமதியுடன் இப்படிப்புகள் வழங்கப்படும்.


சென்னையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் வகுப்பறை, மாணவ, மாணவியருக்கென தனி விடுதி உட்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கேட்டரிங் இன்ஸ்டிடியூட் அமைக்கப்பட உள்ளது. வரும் 2012ம் ஆண்டில் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரென்ட் குழுமம் இன்னும் 100 உணவு விடுதிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. எனவே, இவற்றிற்கு தேவைப்படும் மனிதவளங்கள் ஓரியன்டல் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்களின் மூலம் பூர்த்தி செய்யப்படும்.


உணவு தயாரிப்பு,  ரெஸ்டாரென்ட் மேனேஜ்மென்ட், ரீட்டெயில் மேனேஜ்மென்ட், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பாடங்களும் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. படிப்பில் சுமாரான மாணவர்களும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வகையில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. படிப்புடனே ஆங்கில பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


இவைதவிர, ஏற்கனவே ரெஸ்டாரென்ட் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தங்களது பணியை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் சுகாதார முறையிலான உணவு தயாரிப்பு உட்பட 2 மாத சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கும் சமையலறை சார்ந்த பிரத்யேக படிப்புகள் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us