UPDATED : ஆக 29, 2023 12:00 AM
ADDED : ஆக 29, 2023 01:32 PM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை படிப்புகளுக்கு நாளை (30ம் தேதி) நேரடி சேர்க்கை நடக்கிறது.இது குறித்து பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி பல்கலையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான காலியிடங்கள் கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நாளை (30ம் தேதி) காலை 10 மணிக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் யூ.ஜி., கியூட் தேர்வு மதிப்பெண்ணுடன் பல்கலை துறைகளை நேரில் அணுகலாம். இந்த ஸ்பாட் அட்மிஷன் கியூட் ரேங்கிங் அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால், மாணவர்கள் ஒரிஜனல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.pondiuni.edu.in/admissions - 2023-24 என்ற இணைய முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
