தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கை நுண்ணறிவு பறிபோகுமா வேலை வாய்ப்புகள்?

செயற்கை நுண்ணறிவு பறிபோகுமா வேலை வாய்ப்புகள்?

செயற்கை நுண்ணறிவு பறிபோகுமா வேலை வாய்ப்புகள்?


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதனின் வாழ்வியல் முறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அறிவு புரட்சி. கடந்த நுாற்றாண்டுகளில் வீரம் தான், அதிகம் பேசப்பட்டது. வரலாறுகளில் போர்க்காலம் புகழ் பெற்றது. அடுத்து வந்த தொழில் புரட்சி, 20ம் நுாற்றாண்டை ஆக்கிரமித்துக் கொண்டது.இந்த 21ம் நுாற்றாண்டு முழுவதும், கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு, தகவல் தொழில்நுட்ப புரட்சி தான் ஆட்சி பெற்றுள்ளது. அறிவு சார்ந்த தொழில்நுட்பம், உலகில் அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நுாற்றாண்டில் ஏற்பட வேண்டிய வளர்ச்சியை, 10 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும் இந்த கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பத்தில் இன்றளவு அதிகம் பேசப்படும் தொழில்நுட்பங்களாக, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் போன்றவை தான்.மனித மூளை போன்றே ஒரு பொருளை உணர்ந்து அடையாளம் காணும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு. உதாரணமாக, ஒருவரது முகத்தை பெயரோடு பதிவு செய்து விட்டால், அவரது பெயரை மீண்டும் மீண்டும் இயந்திரம் உச்சரிக்கும். ஒருவரது உறக்க நிலை, விழிப்பு நிலை என்ன என்பதை கண்களின் அசைவை பதிவு செய்து விட்டால், ஒருவர் துாங்குகிறாரா, இல்லை விழித்திருக்கிறாரா என கம்ப்யூட்டர் கண்டறியும். ஆனால் தூங்குவது போல் நடிக்கிறாரா? என கண்டறிய இயலாது.இயந்திர மூளை
ஒரு குழந்தைக்கு பாடம் கற்றுத்தருவதை போன்று, சொல்லிக் கொடுத்தால், அதை நினைவுப்பகுதியில் வைத்துக் கொண்டு பொருளை உணர்ந்து சொல்லும். புதியதாக சிந்திக்கும் திறன் பெற்றது மனித மூளை. இயந்திர மூளைக்கு அது தெரியாது. அவ்வளவு தான் வித்தியாசம். செயற்கை நுண்ணறிவு எல்லாத்துறைகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். விமான நிலையத்திற்குள் நுழையும் குற்றவாளி யார் என்பதை ஒப்பீடு செய்து அறிய முடியும்.செயற்கை நுண்ணறிவு என்பது, கல்வி, பொழுதுபோக்கு, நிதி, மருத்துவம், சுகாதாரம் என பல்வேறு தொழில்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தேவை, சரியான கல்வி முறை. அதற்கான அடித்தளத்தையும், திறமையையும் மாணவர்கள் வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் சாதிக்க முடியும். இதற்கு பின்புலமாக அமைவது கணிதம் மட்டுமே. லீனியர் அல்ஜிப்ரா, கால்குலஸ், பிரபாபலிட்டி மற்றும் புள்ளியியல் போன்றவை செயற்கை நுண்ணறிவு திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கம்ப்யூட்டர் மொழியியலில் பைத்தான், செயற்கை நுண்ணறிவுக்கு அதிக பயன்பாட்டை கொண்டிருக்கிறது.தரமான கல்வி
* பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கும் அப்பாற்பட்டு, பல ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இதில் தரமான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து, கற்பது அவசியம்* மாணவர்கள், ஹேக்கத்தான் போன்ற போட்டிகளில் பங்கேற்பது அவர்களது அறிவு வளர்ச்சியையும், புதியதாக கற்பதையும், அனுபவத்தையும் உயர்த்தும்* தொழிலக பயிற்சியில் இணைந்து செயல்பட்டால், தொழில் ரீதியான அறிவு பெறுவதோடு, விரைவாக தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும்* கம்ப்யூட்டர் இணைப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பு தொடர்பான கல்விகள், கருத்தரங்குகளில் பங்கேற்றல் போன்றவை செயற்கை நுண்ணறிவு துறையில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களை எடுத்துச் சொல்லும்.வாய்ப்புகள் ஏராளம்
செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான, மாணவர்களுக்கு அபாரமான வாய்ப்புகளை அள்ளித்தரும் தொழில்நுட்பமாக மாறி வருகிறது. சரியான திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதோடு, பொருத்தமான துறையை தேர்வு செய்தால், வெற்றிகரமாக இதில் பயணிக்க முடியும். இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு வலிமையான இடத்தை பெறும். புதுமையான பல கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பெற முடியும்.செயற்கை நுண்ணறிவு துறையில், அமெரிக்காவில் எட்டு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என ஸ்டேன்போர்டு பல்கலை மதிப்பீடு செய்துள்ளது. சராசரியாக இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் மற்றும் ஏ.ஐ., துறையில், 45 ஆயிரம் பேருக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 10.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.திறன் மேம்பாடு தேவை
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, அமெரிக்காவில் மட்டும் 1.73 லட்சம் காலி பணியிடங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் 25 ஆயிரத்து 900 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரிட்டனில் இதே காலஅளவில் 16 ஆயிரத்து 825 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய சாப்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சேவை கம்பெனிகளின் சங்கம் (நாஸ்காம்) 2023 பிப்ரவரியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 51 சதவீதம் பணியிட தேவைக்கான இடைவெளி உள்ளது. இந்த தேவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். இதில், இந்தியாவிலிருந்து 31 சதவீத பணியிடங்களை நிரப்ப வாய்ப்புகள் உள்ளன.அதுவும் 18-21 வயதுக்கு உட்பட்டஇளைஞர்கள், கோவை, அகமதாபாத், இந்துார், கொச்சி, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இந்த துறையில் பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்கிறது. செயற்கை நுண்ணறிவால், வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது, அவற்றுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது நல்ல நடைமுறையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us