UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 10:47 AM
கடலுார்:
ஒரு நல்ல நுால் நம்மை வழிநடத்தும்; மனிதனை மாமனிதன் ஆக்கும் என தவ அமுதம் பள்ளி முதல்வர் புனித வள்ளி பேசினார்.தினமலர் பட்டம் இதழ் வினாடி - வினா நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் புனிதவள்ளி பேசியதாவது:
தினமலர் பட்டம் தமிழில் தரமாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மிகப் பழமையான மொழி. இந்த மொழியில் நிறைய பழமையான வார்த்தைகளையும், அழகிய தமிழ் சொற்களையும் கொண்டு பட்டம் இதழை தயார் செய்துள்ளனர். நாங்கள் படிக்கும் போது இப்படிப்பட்ட பட்டம் இதழ் இல்லையே என்ற வருத்தம் இருக்கு. எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டம் படிப்பதற்கு என நேரம் ஒதுக்கி, தினம் படிக்க வைக்கிறோம். கேள்வித்தாள்கள் தயார் செய்து, வாரத்தில் ஒரு நாள் தேர்வு நடத்துகிறோம்.ஒரு நல்ல நுால் நம்மை வழிநடத்தும்; மனிதனை மாமனிதன் ஆக்கும். பட்டம் வினாடி வினா நிகழ்ச்சிக்காக தினமலர் குழுவினர் நம் பள்ளிக்கு வந்துள்ளனர். இது நம்மை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. நம் கல்வி நிறுவனத்தின் தத்துவம் அன்பு, ஒழுக்கம், அறிவு இதனை பின்பற்றி மாணவர்கள் நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
