தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருதுக்கு பெயர் பட்டியல் வெளியீடு

நல்லாசிரியர் விருதுக்கு பெயர் பட்டியல் வெளியீடு

நல்லாசிரியர் விருதுக்கு பெயர் பட்டியல் வெளியீடு


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாநிலத்தில் நல்லாசிரியர் விருது பெறும் 21 பேர் பெயர் பட்டியலை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கல்வி பணி சாதனைகளை பாராட்டி ஆண்டு தோறும் 4 பேருக்கு ராதாகிருஷ்ணன் விருதும், 7 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருதும், 10 பேருக்கு கல்வி அமைச்சரின் வட்டார விருது ஆசிரியர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருது பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ராதாகிருஷ்ணன் விருது
நாவற்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெருமாள், காரைக்கால் கண்ணாப்பூர் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் செல்வராஜ், பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்வடிவு, இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் கந்தசாமி.முதல்வரின் சிறப்பு விருது
மொழி பாடப்பிரிவில் கொடாத்துார் அரசு நடுநிலைப் பள்ளி தமிழாசிரியர் மோகன்ராஜ், பெண்கள் பிரிவில் கீழ்அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அருள்மொழி, சாரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயக்கர் பள்ளி ஆசிரியர் இந்துமதி, பாக்கமுடையான்பட்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் தெரசா சுதா. தொழில்நுட்ப பிரிவில் கொம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பச்சையப்பன், பிரெஞ்சு பிரிவில் கல்வே கல்லுாரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜன் ஜார்ஜ்.கல்வி அமைச்சரின் வட்டார விருது
குமாரப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கந்தவேல், இந்திரா நகர் அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா கிருஷ்ண பிரசாத், சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன், கதிர்காமம் தில்லையடி வள்ளியம்மை ஆசிரியர் துரை, காலாப்பட்டு குப்பம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, லிங்காரெட்டிப்பாளையம் பான்கோஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவபெருமாள்.காரைக்கால் வரிச்சகுடி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கரிகாலன், கோட்டுச்சேரி வ.உ.சி.,அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கனகராஜ். மாகி, பந்தகால் குமரன் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் ரெசிதா, ஏனாம் துன்ன நாகராவ் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாய் ஜானகி. இவர்களுக்கு வரும் 5ம் தேதி கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில் கவர்னர் தமிழிசை,முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் விருதுகளை வழங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us