தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கப்பள்ளி வளர்ச்சிக்கு சம்பளம் வழங்கிய கவுன்சிலர்

தொடக்கப்பள்ளி வளர்ச்சிக்கு சம்பளம் வழங்கிய கவுன்சிலர்

தொடக்கப்பள்ளி வளர்ச்சிக்கு சம்பளம் வழங்கிய கவுன்சிலர்


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 08:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
திருவொற்றியூர் ஏழாவது வார்டில் உள்ள கார்கில் வெற்றி நகரில், மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதன் காரணமாக, பகுதி நேரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், மாமன்ற கவுன்சிலர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல் தொகுப்பூதியமாக 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.அதன்படி ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கே.கார்த்திக் தனக்கு வழங்கப்பட்ட தொகுப்பூதியத்தை பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கிட முடிவு செய்தார். நேற்று முந்தினம் காலை பள்ளிக்கு சென்ற அவர் தன் தொகுப்பூதியத்தை பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார். மேலும், மாதந்தோறும் வழங்கப்படும் தொகுப்பூதியத்தை பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளமாக வழங்க உள்ளேன் என கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us