UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 05:55 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வழியே செப்., 10ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் முன்கூட்டியே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வு மைய விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வில் 97 காலியிடங்களுக்கு 42,712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
