UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 02:22 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் பயிலும் மாணவர்கள் 3,341 பேருக்கு, அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க, நடப்பு ஆண்டுக்கு பேருந்து பயண அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, அரசு கலை கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,ல் பயிலும் மாணவ, மாணவியருக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இதன் வாயிலாக முதற்கட்டமாக, காஞ்சி, செங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3,341 மாணவ, மாணவியருக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க, நடப்பு ஆண்டு பிரத்யேகமாக செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு வடிவில், பயண அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ளவர்களுக்கு, பேருந்தில் இலவசமாக பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயண அட்டை படிப்படியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
