தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்காணிப்பு, கட்டுப்பாடு இல்லாத கல்விச் சுற்றுலா

கண்காணிப்பு, கட்டுப்பாடு இல்லாத கல்விச் சுற்றுலா

கண்காணிப்பு, கட்டுப்பாடு இல்லாத கல்விச் சுற்றுலா


UPDATED : ஜன 17, 2010 12:00 AM

ADDED : ஜன 17, 2010 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2010 12:00 AM ADDED : ஜன 17, 2010 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால் குழந்தைகளை இழந்து பெற்றோர் தவிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய இளைய சமுதாயத்தை அசாதாரணமாக இழக்கும் அவலம் ஏற்படுகிறது. இதை தடுக்க, கல்விச் சுற்றுலா மற்றும் இன்டஸ்ட்ரியல் விசிட் அழைத்துச் செல்வதில் கல்லூரிகளுக்கு, அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.இன்டஸ்ட்ரியல் விசிட்டை பொறுத்த வரையில், உள்ளூரில் பல நிறுவனங்கள் இருந்தாலும், வெளியூர்களுக்கு செல்லவே மாணவர்களும், கல்லூரி பேராசிரியர்களும் விரும்புகின்றனர்.

வேறு பல சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லலாம் என்பதே இதற்கு காரணம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அருவிகள், ஆறுகள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, கல்விச் சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது, வழியில் உள்ள ஆற்றிலும், நீர் வீழ்ச்சிகளிலும் மாணவ, மாணவியர் குளித்து மகிழ்கின்றனர்.

இந்த நேரத்தில், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய கல்லூரி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருந்துவிடுவதால், மாணவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.சமீபத்தில் இன்டஸ்ட்ரியல் விசிட் சென்று, காவிரி ஆற்றில் குளிக்கும் போது புதை மணலில் சிக்கி பலியான, தாம்பரத்தைச் சேர்ந்த மாணவன் ஆல்வினின் தந்தை விஜயன் கூறியதாவது:

சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில், தகவல் தொழில்நுட்பத் துறையில் 3ம் ஆண்டு படிக்கும் 16 மாணவியர் உட்பட 41 மாணவ, மாணவியர்(எனது மகன் உட்பட), 2 பெண் விரிவுரையாளர்கள் கடந்த 12ம் தேதி திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் உள்ள ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை தொழிற்சாலைக்கு இன்டஸ்ட்ரியல் விசிட் சென்றனர். தொழிற்சாலையை சுற்றிப்பார்த்த பின், சென்னை திரும்பும் போது, சம்பந்தமில்லாமல், முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்க மாணவர்களுக்கு, அனுமதி வழங்கியுள்ளனர்.

முக்கொம்பு காவிரி ஆற்றில், புதை மணலில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளதாக, அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட் டுள்ளது. இருப்பினும், அங்கு குளிக்க மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று மாணவர்களை, முன் எச்சரிக்கை எதுவும் இன்றி ஆற்றில் குளிக்கவிட்டது; பெற்றோர்களிடம் உரிய அனுமதி கடிதம் பெறாமல், இன்டஸ்ட்ரியல் விசிட் அழைத்துச் சென்றது; தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களை சர்க்கரை ஆலைக்கு இன்டஸ்ட்ரியல் விசிட் அழைத்துச் சென்றது; 41 மாணவ, மாணவியரின் கண்காணிப்பிற்கு, இரண்டு பெண் விரிவுரையாளர்களை மட்டும் உடன் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல் பட்டுள்ளது.

கல்லூரிகளில் இன்டஸ்ட்ரியல் விசிட் அழைத்துச் செல்லும் போது பெற்றோர் அனுமதிக் கடிதம் பெற வேண்டும். எனது மகன் சென்ற விசிட்டிற்கு கல்லூரி நிர்வாகம் என்னிடம் எந்த ஒரு அனுமதி கடிதமும் பெறவில்லை.

அதே போல, ஐ.டி., படிக்கும் மாணவனை, சர்க்கரை ஆலைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதால் பயனே கிடையாது. இதுபோன்ற இன்னொரு சம்பவம் நடக்காத வண்ணம் பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு, கல்லூரி நிர்வாகம் முழு விளக் கம் அளிக்க வேண்டும். இந்த பிரச்னை யை சட்ட ரீதியாக அணுக ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு விஜயன் கூறினார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து, வேதாரண்யம் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து, உள்ளிட்ட கோர சம்பவங் கள் நடக்கும் போது, அரசு அது குறித்த விஷயங்களில் கட்டுப்பாடு விதிப்பதும், கண் காணிப்பதும் வாடிக்கை. ஆனால், கல்விச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் போது நிகழும் விபரீத சம்பவங்களில் அங்கொன்று, இங்கொன்றுமாக பல இடங்களில் மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us