UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 10:38 AM
அதன் மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை சார்பில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதில் உயர், மேல்நிலைப் பிரிவில் 4 முதல் 6, தொடக்கக் கல்வியில் 4 முதல் 6, மெட்ரிக் 1, ஆங்கிலோ இந்தியன் பள்ளி 1, மாற்றுத்திறனாளி 1 என்ற வகையில் மாவட்டத்திற்கு 10 முதல் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகின்றன. தனியார் சுயநிதிப்பள்ளிகளை பொறுத்தவரை மாவட்டத்திற்கு தலா ஒரு மெட்ரிக் பள்ளி ஆசிரியருக்கு மட்டும் விருது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் படிக்கும் 1.40 கோடி மாணவர்களில் 65 முதல் 70 லட்சம் மாணவர்களை தனியார் சுயநிதிப்பள்ளி ஆசிரியர்கள் தான் உருவாக்குகின்றனர். இப்பள்ளிகள் தான் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும் காரணமாக உள்ளன. இதுதவிர 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் நர்சரி, பிரைமரி ஆசிரியர்களை விருதுக்காக பரிசீலனை கூட செய்வதில்லை. தமிழக கல்வி வளர்ச்சியில் நர்சரி, தனியார் சுயநிதிப்பள்ளிகள் பங்கு முக்கியமாகும்.இவர்களும் மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து கொள்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இனிவரும் காலங்களில் நல்லாசிரியர் விருது அளித்து கவுரவிக்க வேண்டும்.இதுகுறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம், என்றார்.
