தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கட்டடப் பணிகள் முடுக்கிவிட நடவடிக்கை

பள்ளிக் கட்டடப் பணிகள் முடுக்கிவிட நடவடிக்கை

பள்ளிக் கட்டடப் பணிகள் முடுக்கிவிட நடவடிக்கை


UPDATED : ஜன 18, 2010 12:00 AM

ADDED : ஜன 18, 2010 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2010 12:00 AM ADDED : ஜன 18, 2010 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “கோவை மாவட்டத்தில் நிதி பற்றாக்குறையால் தாமதமாகி வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை, விரைவுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் கூறினார்.


கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்(எஸ்.எஸ்.ஏ) முதன்மை கல்வி அலுவலராக(சி.இ.ஓ) இருந்த நாராயணசாமி, ஓராண்டுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய சி.இ.ஓ., நியமிக்கப்படவில்லை. அவரது பொறுப்புக்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(ரெகுலர்) ஆனந்தி கவனித்து வந்தார்.


இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டின மாவட்டங்களுக்கான மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலசுப்ரமணியன், கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஏ., புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜன. 18ம் தேதி இவர் பதவியேற்றார். சி.இ.ஓ., ஆனந்தியிடம் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டார். இதற்கு முன் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராக பதவி வகித்தபோது, இவர் மேற்கொண்ட ஆசிரியர் கல்வி குறித்த ஆராய்ச்சிகள் மூன்று முறை தேசிய விருது பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தஞ்சாவூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் அலுவலராக பதவி வகிப்பதற்கு முன் அரியலுõர், பெரம்பலுõர் மாவட்டங்களின் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணிபுரிந்துள்ளார். பொறுப்பேற்ற பின் பாலசுப்ரமணியன் கூறுகையில், “எஸ்.எஸ்.ஏ., திட்டம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஏற்படுத்தப்படுத்தப்பட்ட சிறந்த திட்டம். அனைத்து மாணவர்களும் செயல்வழிக் கல்விக்கு மாற வேண்டும். ஒவ்வொரு விஷயம் பற்றியும் ஆசிரியரிடம் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கும் அளவுக்கு அறிவை வளர்க்க வேண்டும்.


அதன் மூலம் அனுபவ அறிவை பெற வேண்டும். கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின்  நிதி பற்றாக்குறையால் பள்ளிக் கட்டடப் பணிகள்  தாமதமாகி வருவதாக தெரிய வந்துள்ளது. அது பற்றி விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us