தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உங்களின் குழந்தையாக மாணவர்களை கவனிக்க வேண்டாமா?

உங்களின் குழந்தையாக மாணவர்களை கவனிக்க வேண்டாமா?

உங்களின் குழந்தையாக மாணவர்களை கவனிக்க வேண்டாமா?


UPDATED : அக் 09, 2023 12:00 AM

ADDED : அக் 09, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2023 12:00 AM ADDED : அக் 09, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்:
ஒவ்வொரு மாணவரையும் உங்களின் குழந்தையாக கவனிக்க வேண்டாமா. அவர்களின் படிப்புக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டாமா, அலட்சியம் காட்டலாமா? என மாவட்ட கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் மஞ்சு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.ஆலோசனை
கோலார் மாவட்டத்தில் தங்கவயல் கல்வி வட்டாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள உரிகம் ஐந்து விளக்கின் பி.ஜி.எம்.எல்., ஆங்கில துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியை பற்றி ஆய்வு செய்ய, நேற்று முன்தினம் மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் மஞ்சு வந்தார்.மாவட்ட கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தங்கவயல் வட்டார கல்வி அதிகாரி முனிவெங்கட ராமாச்சாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்க்கண்ட கவுடா, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நாகரத்னா, திவ்யா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தியிடம் ஆணைய உறுப்பினர் மஞ்சு சரமாரி கேள்விகள் கேட்டார்.அவர் கூறியதாவது:
தங்கவயல் பி.ஜி.எம்.எல்., ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியர்களே இல்லாத அவல நிலை குறித்து எழுந்துள்ள கோரிக்கையின்பேரில், மாவட்ட கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை 115 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற தகவல் உங்கள் கவனத்திற்கு வந்ததா, இல்லையா?அலட்சியம் ஏன்?
வந்திருந்தால் அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன. ஒவ்வொரு மாணவர்களையும் உங்களின் குழந்தையாக கவனிக்க வேண்டாமா? அவர்களின் படிப்புக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டாமா; அலட்சியம் காட்டலாமா?இவ்வாறு சரமாரியாக அவர் கேள்வி கேட்டார்.இதற்கு பதில் அளித்த மாவட்ட கல்வித் துறை அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, புதியதாக வேலைவாய்ப்பு வழங்கும் அதிகாரம், எமக்கு கிடையாது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இதற்கு மஞ்சு, அப்படியானால், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா; அதற்கான பதில் கிடைத்ததா? இது நேற்றோ, இன்றோ ஏற்பட்ட பிரச்னை அல்ல. 20 ஆண்டுகளாக இருந்து வரும் நிலைமை. குழந்தைகள் கல்வி உரிமையில் பாதிப்பு ஏற்படக் கூடாது. இன்னும் ஒரு வாரத்துக்குள், மாணவர்களின் பெற்றோர், இப்பள்ளி மீது அக்கறையுள்ள நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.அனுமதி கேட்பு
புதியதாக ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக்கு தடை இருக்கக் கூடாது. தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஆசிரியர்களை நியமிக்கவும் அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் முன் வருவோரை வரவேற்க அனுமதி வழங்க வேண்டும், என்றார்.முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சுநாத், ஆணைய உறுப்பினர் மஞ்சுவிடம் மனு ஒன்றை அளித்தார். மனுவில், &'2007ம் ஆண்டு முதல் பள்ளியின் சீரமைப்பு பணிகள் செய்து வந்தோம். ஏழு ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வந்தோம். இப்பள்ளி நிர்வாகத்தில் தலையிட கூடாதென தெரிவித்ததால், முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் ஒதுங்கிக் கொண்டோம். சம்பளம் இல்லாததால், ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகிவிட்டனர்.எங்களுக்கு உரிய அனுமதி வழங்கினால், நாங்கள் மறுபடியும் தேவையான ஆசிரியர்களை நியமிப்போம். தரமான கல்வி கிடைக்க செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிக்கு சிபாரிசு செய்தார். அரசிடமும் தெரிவிப்பதாக உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us