UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:12 AM
திண்டுக்கல்:
குழந்தைகளிடம் தோழனாக இருப்பதே அவர்களின் எதிர்கால பிரச்னைக்கு தீர்வாகும் என புத்தக திருவிழாவில் டாக்டர் இஸ்மாயில் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கிய களம் சார்பில் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தக திருவிழா 7ம் நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் 16 வயது சிறுமியாக உயிரிழந்துள்ளார். எதிர்கால பயத்தை உருவாக்கி மாணவர்களை பயத்தின் பிடியில் கட்டமைத்துள்ளது இன்றைய நவீன சூழல். இன்டர்நெட் இல்லாத காலத்தில் முன்னோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினர். இதனால் இயற்கையிலே அவர்களுக்கு மனதிட போக்கு உருவானது. பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை வளர்ப்புக்கே திக்கி திணறுகின்றனர் பெற்றோர்கள். லட்சியங்களை குழந்தைகளின் மேல் திணித்து சூழ்நிலை கைதியாக்கி விடுகின்றனர். இதனால் இளமை பருவத்தில் மனகுழப்பத்திற்கு ஆளாகி பெற்றோர்களிடம் உள்ள மரியாதையை குழந்தை கைவிடுகிறது. இவ்வாறு பேசினார்.மாவட்ட இலக்கிய கள செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் முனியப்பன் வரவேற்றார். தாம்பரம் போலீஸ் இணை ஆணையர் மூர்த்தி, கூட்டுறவு இணை பதிவாளர் ராமகிருஷ்ணன் ,லயன்ஸ் ஆளுனர் ராதாகிருஷ்ணன் பேசினர். இலக்கிய கள சின்னத்துரை நன்றி கூறினார்.
