தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிகர்நிலை பல்கலைக் கழகங்களே தேவையில்லை: பொன்முடி

நிகர்நிலை பல்கலைக் கழகங்களே தேவையில்லை: பொன்முடி

நிகர்நிலை பல்கலைக் கழகங்களே தேவையில்லை: பொன்முடி


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தகவலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் 16 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மத்திய அரசு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரைத்தது. இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.


அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. நிகர்நிலை பல்கலை என்ற பெயரில் நிகரற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டு, மத்திய மாநில அரசுகளை மதிக்காமல் அவை தன்னிச்சையாக செயல்படுகின்றன. எனவே நிகர்நிலை பல்கலைகழகங்களை ரத்து செய்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழக அரசு முழு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் இந்த முடிவு ஒரு சில நிகர் நிலைப் பல்கலைகழகங்களுக்கு மட்டும் என நின்று விடாமல், அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கான அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதே தமிழக அரசின் பரிந்துரை, என்றார்.


மாணவர்கள் நலனுக்கு பாதுகாப்பு : தமிழகத்தில் தற்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவில் படிக்கிறார்களோ அதே பாடப்பிரிவில் தங்கள் கல்வியை தொடர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றி அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதோடு அவ்வாறு செய்தால் தான் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்கள் கட்டண விவகாரங்கள் அரசின் கட்டுக்குள் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us