UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 09:06 AM
பெங்களூரு:
இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க செய்ய, அவர்களுக்கு நவீன அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.பெலகாவி விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தென் மண்டல இந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடந்தது.மாநாட்டை துவக்கி வைத்து, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. டிஜிட்டல் மாற்றம் என்பது, நமது வாழ்நாளின் மிக முக்கியமான மாற்றமாக மாறி உள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றம் உலக அளவில் பேசப்படுகிறது. டிஜிட்டல் மாற்றம் என்பது, நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இன்னும் வலுவாக்க, &'வோக்கல் பார் லோக்கல்&', &'மேக் இன் இந்தியா&' மற்றும் பிற முக்கியமான திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும்.இன்றைய பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு தேவையான திறன்களை வழங்கும் வேலையை வழங்க வேண்டும். இன்றைய பல்கலைக்கழகங்கள் தங்கள் நிர்வாக மற்றும் கல்வி துறைகளில் டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான வளங்களை ஏற்று உலக அளவில் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.உயர் கல்வியில் டிஜிட்டல் மாற்றம் என்பது, உயர்தர கல்வி மற்றும் சம வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் உயர்கல்வியில் ஆராய்ச்சி நடத்தும் முறையை மாற்றியுள்ளது.உயர் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இது கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க செய்ய, அவர்களுக்கு நவீன அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
