தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு

மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு

மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் 2450 பேரை அரசு, நிதி உதவி பெறும் கல்லுாரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு 35 பேர் வீதம் 70 பள்ளிகளுக்கு 2450 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்லுாரிகள் பற்றி அறிந்து கொள்ளவும், அங்குள்ள பாடப்பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்ளவும் அரசு, நிதி உதவி பெறும் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை நவ., 7,8 ல் பள்ளிக்கு அருகே உள்ள கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல உள்ளனர். மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரிகள், உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகள் என 11 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மாணவர்களை காலை அழைத்து சென்று கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், ஆய்வகங்கள், நுாலகங்கள், பாடப்பிரிவு தொடர்பான வேலை வாயப்புகள் பற்றி வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us