தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் விமானிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி

இளம் விமானிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி

இளம் விமானிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் பயிற்சி பள்ளி தன், 75வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச அளவில் விமானிகள், விமான பயிற்றுனர்களுக்கான பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகள் நடந்தன.இப்பள்ளியில் பயின்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், மூத்த விமானிகள், முன்னாள் வீரர்கள், குடும்பத்துடன் பங்கேற்றனர். இதற்கிடையில், விமானப்படை சாகச நிகழ்ச்சியில், ஹெச்.ஏ.எல்., - எச்.டி-., 2, பிளாட்டஸ், கிரண், எம்.ஐ-., 17, டோனியர் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் தாழ்வாக பறந்தும், வானத்தில் பல்டி அடித்தும் சாகசம் செய்தன.விமானப் படையின் ஆகாச கங்கா குழுவை சேர்ந்த ஒன்பது வீரர்கள், 9,000 அடி உயரத்தில் இருந்து, ப்ரீ டைவிங் செய்தனர். 9,000 அடியிலிருந்து ஹெலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்கள், 6000 அடியில், பாராசூட் விரித்து, அதன் உதவியுடன் தரையில் குறிப்பிட்ட இலக்கை வந்தடைந்தனர்.தேசியக்கொடி போன்று, மூன்று வீரர்கள் ஒன்றாக சேர்ந்து, &'ஸ்கை டைவிங்&' செய்ததும், விமானப் படையின் கொடியை ஏந்தியவாறு, இரண்டு வீரர்கள் ஒன்றாக கைகளை இணைத்து குதித்ததும் பார்ப்போரை வியப்படையச் செய்தது.விமானப் படையில், புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நான் விமான பயிற்சி பெற்ற காலத்தில், தொழில் நுட்பங்கள் பழமையாக இருந்ததை போல் இல்லாமல், தற்போது, 20 வயதுக்குள் விமானப் படையில் சேரும் வீரர்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியில், விமானம் ஓட்டுவது எப்படி, விமானத்தை தரையிறக்குவது எப்படி என, பல்வேறு விஷயங்களை தாங்களாவே கற்றுக் கொள்கின்றனர். வரும் காலத்தில், விமானிகளுக்கு தேவையான சிறப்பான பயிற்சிகளை வழங்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us