தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டாக் ஆபீசில் கவர்னர் தமிழிசை ஆய்வு!

சென்டாக் ஆபீசில் கவர்னர் தமிழிசை ஆய்வு!

சென்டாக் ஆபீசில் கவர்னர் தமிழிசை ஆய்வு!


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சென்டாக் கவுன்சிலிங் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. தவறு நடந்தால் புகார் தெரிவிக்கலாம் என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.நாடு முழுதும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை, கடந்த செப். 30,ம் தேதிக்குள் முடிக்க, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. ஆனால் புதுச்சேரியில் கவுன்சிலிங் கால தாமதமாக நடத்தப்பட்டது. மருத்துவப் படிப்பு சேர்க்கை குளறுபடிக்கு காரணமான சென்டார் அதிகாரிகள் இருவர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சென்டாக் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்நிலையில், நேற்று கவர்னர் தமிழிசை, கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாணவர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார். நவ. 15க்குள் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கையை முடிக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வுக்கு பின் கவர்னர் தமிழிசை கூறியதாவது:
மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில், கால நீட்டிப்பு அவகாசத்தால், 353 மாணவர்கள் பலனடைவர். மேலும் பல் மருத்துவம், இயற்கை மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கும் பலன் உள்ளது. இதற்காக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு, புதுச்சேரி அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 7ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்குகிறது. இந்த கால நீட்டிப்பு, மிக கடுமையான முயற்சிக்குப் பின் சட்ட ரீதியாக, கிடைத்துள்ளது.தற்போது கவுன்சிலிங் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுகிறது. இதில் முறைகேடு நடந்தால், ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். தாமதம் ஏற்படுத்திய அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலிங் பணியை அதிகாரிகள் விரைவாக மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் மீது நிர்வாக ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும்.இந்த விவகாரத்தை, உள்துறை அமைச்சரிடம் கூறிய உடன், பிரதமரிடம் அனுமதி பெற்று, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று, மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைகிறோம்.மாணவர் சேர்க்கையில் முறைகேடு எனக்கூறி, விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்பு மத்திய அரசை அணுகவில்லை. குறுகிய காலகட்டத்தில், 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன், 353 மாணவர்களின் எதிர்காலம் வீணாகாமல் தடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கவர்னர் கூறினார்.கவர்னர் மாளிகை பா.ஜ, அலுவலகமா?
பா.ஜ., அலுவலகமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தெந்த மாநிலங்கள் என கணக்கெடுத்து வரச் சொல்லுங்கள். பிறகு பதில் கூறுகிறேன். நாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us