தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதிகள் வேண்டும்: மாணவிகள் தர்ணா

அடிப்படை வசதிகள் வேண்டும்: மாணவிகள் தர்ணா

அடிப்படை வசதிகள் வேண்டும்: மாணவிகள் தர்ணா


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 08:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 08:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம், மூக்காரெட்டிபட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட நல மாணவிகளுக்கு எச்.புதுப்பட்டியில் விடுதி உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 56 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், உணவில் புழுக்கள் இருப்பதாகவும், வாரந்தோறும் மட்டன் வழங்குவதிலை என மாணவிகள் புகார் தெரிவித்தனர். முறையான கழிவறை வசதி இல்லை.இதனால், காலை கடன்களை கழிப்பதற்காக மாணவிகள் விவசாய நிலங்களை நோக்கி செல்லும் நிலை உள்ளது. கடந்த சில தினங்களாக, விடுதியில் மின் மோட்டார் பழுதானதால் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மாணவிகள் வெளியில் சென்று, விவசாய கிணற்று பகுதியில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.இதுகுறித்து மாணவிகள் புகார் தெரிவித்தும் விடுதி காப்பாளர், சமையலர் உள்ளிட்டோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, விடுதி மாணவிகள் நேற்று காலை, 8:00 மணிக்கு பாத்திரங்களுடன் விடுதி முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா, ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஆகியோரிடம் மாணவிகள் விடுதியில் இருக்கும் குறைகள் குறித்து தெரிவித்தனர்.பின் அங்கு வந்த, பாப்பிரெட்டிபட்டி ஆதி திராவிடர் தனி தாசில்தார்        (பொறுப்பு) சின்னா மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததால், 9:00 மணியளவில் மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.இது குறித்து தனி தாசில்தார் சின்னா கூறுகையில், விடுதியில், மின் சப்ளை காரணமாக குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் முழுமையாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் சிறு, சிறு குறைகள் தெரிவிக்கின்றனர். அது முழுமையாக செய்து கொடுக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us