தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிளாட் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வம்

கிளாட் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வம்

கிளாட் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வம்


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
மத்திய சட்ட கல்லுாரிகளுக்கான, கிளாட் நுழைவுத்தேர்வு எழுத அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர்.மத்திய அரசு தொழில்நுட்ப கல்லுாரி, மருத்துவ கல்லுாரி, சட்ட கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர, தனித்தனி நுழைவு தேர்வுகள் உள்ளன. மருத்துவ கல்லுாரிக்கான, நீட் நுழைவுத்தேர்வை போல், ஜே.இ.இ., சட்டப்படிப்பிற்கு, கிளாட் பல்கலைகளில் படிக்க, கியூட், மேற்படிப்புக்கு, கேட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் உள்ளன. இதுபோன்ற தேசிய அளவிலான பல்கலை, கல்லுாரிகளில் தமிழக மாணவர்கள், முக்கியமாக அரசு பள்ளி மாணவர்கள் சேர அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் இணைய தளத்தில் அனைத்து கல்லுாரி நுழைவு தேர்வுகளுக்கான விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.பள்ளி வாயிலாக நுழைவுத்தேர்வு எழுதும், எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு, கட்டணத்தையும் அரசு வழங்குகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதேபோல், நாடு முழுவதும் உள்ள, 22 தேசிய சட்ட பல்கலையில் சேர, கிளாட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கும் பயிற்சி வகுப்புகள் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நுழைவுத்தேர்வு கட்டணமான, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு, 3,500 ரூபாயும்; பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு, 4,000 ரூபாயும் அரசு மாணவர்களுக்கு கொடுத்து விடுகிறது.இந்தாண்டுக்கான, கிளாட் நுழைவுத்தேர்வு டிச., 3ல் நடக்கிறது. இதுவரை தமிழக அரசு பள்ளிகளில் இருந்து மட்டும், 7,000க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் நுழைவுத்தேர்வு கட்டணத்தை அரசு மாணவர்கள் வங்கி கணக்கில் சில தினங்களுக்கு முன்பு செலுத்தியுள்ளது.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
நீட், ஜே.இ.இ.,க்கு அடுத்து சட்ட கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்களும், மாணவர்களுக்கு பிடித்த துறையில் படிக்க சுதந்திரம் அளிக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us