UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 10:45 AM
ஈரோடு:
சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்ய, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர் படை சார்பில், கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், பக்தி உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, சபரிமலை சேவை முகாமுக்கு அனுப்பி வைக்கிறோம்.இந்தாண்டும் சேவை செய்ய, ஈரோட்டில் இருந்து தொண்டர்கள் தேர்வு செய்ய உள்ளோம். வரும், 25 முதல், டிச., 7 வரை, டிச., 5 முதல், 17 வரை, டிச., 15 முதல், 28 வரை, டிச., 28 முதல், ஜன., 11 வரை, ஜன., 8 முதல், 21 வரை என பல்வேறு பிரிவாக தொண்டர்கள் அனுப்பப்படுவர்.சன்னிதானம், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், பம்பா முகாம்களில் தங்கி இருந்து, 12 நாட்களுக்கு சுக்குநீர் வினியோகம், ஸ்டிரச்சர் முதலுதவி சேவை, ஆக்சிஜன் பார்லர் முதலுதவி சேவை, அன்னதானம், புண்ணிய பூங்காவனம் சேவை செய்யலாம்.விருப்பம் உள்ள மாணவர்கள், 5 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், கல்லுாரி மூலம் தங்கள் குடியிருப்பு பகுதி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் சான்றிதழ் மற்றும் முகவரி சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்க போன் எண்: 89734 05331, 75987 45551ல் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சேவா சங்க ஈரோடு மாவட்ட நிர்வாகி அய்யப்பன், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
