UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 10:39 AM
அ நிறம் | அளவு
உடுமலை:
பூளவாடி கிளை நுாலக வாசகர் வட்டத்துக்கு, மாநில அரசின் சார்பில் நுாலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.தேசிய நுாலக வாரவிழாவையொட்டி சிறப்பாக செயல்படும் நுாலகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், நுாலக வளர்ச்சியை மேம்படுத்துதல், சிறந்த சேவை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி முழுநேர கிளை நுாலகத்துக்கு நுாலக ஆர்வலர் விருது மாநில அளவிலான நுாலக வாரவிழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது. நுாலகர் லட்சுமணசாமி விருதை பெற்றார்.
