மாணவர்களை நாட்டுப்பற்று உள்ளவர்களாக உருவாக்க வேண்டும்!
மாணவர்களை நாட்டுப்பற்று உள்ளவர்களாக உருவாக்க வேண்டும்!
UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 11:03 AM
உத்தமபாளையம்:
மாணவர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அதை தவறாது செய்ய ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் பேசினார்.உத்தமபாளையம் விகாசா கல்வியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் இந்திரா தலைமை வகித்தார். கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் ,2018- 2022 வரை படித்த 300 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இன்றைய கல்வி தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. அதற்கேற்ப ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் பணி இருக்க வேண்டும். ஆசிரியர் பணி சவாலானது. அதை திறம்பட செய்ய வேண்டும். மாணவர்களை நாட்டுப்பற்று கொண்டவர்களாக உருவாக்க ஆசிரியர்கள் உறுதியேற்க வேண்டும். ஒவ்வொரு மாணவரையும் நாட்டுப்பற்று கொண்டவராக மாற்றும் வேளையில், நமது மொழி, பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் தெளிவாகவும், புரியும்படி பயிற்றுவிக்க வேண்டும். இன்று பட்டம் பெறும் ஆசிரியர்கள், நாளை நாட்டுப்பற்று கொண்ட மாணவர்களை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.விழாவில் நிர்வாக குழு செயலர் உதயகுமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, டாக்டர்கள் சுப்பையன், நரேன் குமரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தேவி, மேல்நிலைப்பள்ளி முதல்வர் குமரேசன் உள்ளிட்ட உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.