UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 04:58 PM
உத்தரகோசமங்கை:
நடனக்கலை வரலாற்றில் முதன் முறையாக நடராஜர் நாட்டியம் ஆடுவது போல பரத கலைஞர்கள் வடிவமைத்த நாட்டியாஞ்சலி, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் நேற்று நடந்தது.உத்திரகோசமங்கை மங்கள நாதர், மங்களநாயகி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாலை 4:00 முதல் 6:30 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த 22 பரத நாட்டியப் பள்ளிகளில் இருந்து, 201 மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்கள் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களாகிய திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருபொன்னுாஞ்சல் பாடல்களுக்கு நடராஜர் நாட்டிய திருவடிவத்தில் நின்று ஒரு நாழிகையான 24 நிமிடங்கள் நடனம் ஆடினர்.இது உலக நாட்டிய பாரம்பரிய வரலாற்றில் நடைபெற்ற முதல் நிகழ்வாகும். நடராஜர் திருவுருவத்தை ட்ரோன் வாயிலாக திரையில் பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். நாட்டியத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பூஜை செய்த சலங்கை, நடராஜர் திருவடிவ கேடயம், சான்றிதழ்கள் அஜ்மா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.