மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் மட்டுமே
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் மட்டுமே
UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 04, 2024 08:59 AM
நமக்கு எல்லாமே நம் உடல் தான். நம் உடல், உள்ளுறுப்புகளை நேசிக்காமல் இருக்க முடியாது. அவ்வாறு நேசிப்பதின் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து ஆசிரியர் இந்நுாலை எழுதியுள்ளார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அந்த செல்வம் எப்போதும் குறைவில்லாமல் நம்மிடம் இருக்க வேண்டும்.அதற்கு நம்மை பாதிக்கும் நோய்கள், நமது உடலில் ஏற்படும் சில சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தில் தான் தலை முதல் கால் வரையிலான நோய்கள் பற்றி, சிறந்த மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து ஆசிரியர் இந்நுாலை எழுதியுள்ளார்.ஆசிரியர்: ஜி.வி.ரமேஷ்குமார்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை: ரூ.150.இந்த புத்தகத்தின் மூலம் தமிழகத்தின் 2500 ஆண்டு வரலாற்றில்,முதன் முதலில் தமிழ் நிலம் முழுமையும் சோழர்கள் ஆட்சியில் இருந்தது தெரிகிறது. ராஜராஜன் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நிலம் முழுமைக்கும் ஒரே நில வரியை ஏற்படுத்தியதை அறியலாம். இன்றைக்கும் நாம் எழுதும் தமிழ் எழுத்து வடிவம் சோழர் காலத்தில் தோன்றியது தான். நீராலும் தமிழ் நிலத்தை இணைத்தவர்கள் சோழர்கள்.சென்னை செம்பரம்பாக்கம் ஏரி, கன்னியாகுமரியில் பெரியகுளம் ஏரி, சிங்காநல்லுார் ஏரி, திருப்பூண்டி ஏரிகள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதை இந்த புத்தகம் மூலம் எளிதில் அறிய முடிகிறது. சோழர்கள் வரலாற்றை தாங்கி நிற்கும் பொக்கிஷமாக இந்த புத்தகம் உள்ளது.ஆசிரியர்: சமஸ்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட். விலை: ரூ.500.ஆண்டாள் நாச்சியாரின் அற்புதமான அனுபவங்களை உணர்வு பூர்வமாகவும், அறிவியல் சார்ந்தும் உணர உதவும் விதத்தில் ஆசிரியர் எழுதியுள்ளார். அவள் மண் சார்ந்து, மரபு சார்ந்து, அறிவியல்ஆய்ந்து, வரலாறில் நுழைந்து, நீர் மேலாண்மையில் தெளிந்து, தமிழில் அகழ்ந்து, வானியல் சாஸ்திரத்தில் ஒளிர்ந்து, நதிகளாய் வளைந்து, புள் இனங்களாய் திரிந்து, மலர்களாய் மலர்ந்து, மணம் பரப்பிய காதலும், கண்ட கனவுகளும் அவள் அறிந்த கண்ணன் வரலாறும், கவித்திறனுடன் இணைந்த நேர்மறை எண்ணங்களும், பக்தி நெறி கமழும் சரணாகதி தத்துவமும், பெண்மையின் உயர் அடையாளங்களாய் ஆண்டாளை நிலை நிறுத்திய பாங்கு, இந்த நுாலை மீண்டும் மீண்டும் படிக்க துாண்டுகிறது.ஆசிரியர்: பவித்ரா நந்தகுமார்,வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட். விலை: ரூ.280.இந்த கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை படித்து பார்க்கையில் பண்டைய வரலாற்றை எளிதில் புரிய வைக்கிறது. மகேந்திர பல்லவர் முதலில் சமணராயிருந்து பின்னர், அப்பர்சுவாமியின் உதவி பெற்று சைவர் ஆனதை அறியலாம். வாதாபி புலிகேசி மாபெரும் சைனியத்துடன் தென்னாட்டின் மீது படையெடுத்து வஞ்சி கோட்டையை முற்றுகையிட்டது. புலிகேசி கொள்ளிடக்கரை சென்று அங்கே சேர, பாண்டிய, களப்பாள மன்னர்களை சந்தித்தது.வஞ்சிக்கோட்டையை கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பி சென்றது என இந்த புத்தக கதையின் மூலம் ஏராளமான வரலாற்று கதைகளை வாசகர்களுக்கு எளிதில் புரியும் படி ஆசிரியர் எடுத்து கூறியுள்ளது வரவேற்பு தருகிறது.ஆசிரியர்: கல்கிவெளியீடு: நர்மதா பதிப்பகம் விலை: ரூ.850.