sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விவசாய கனவை விதைக்கும் வேளாண் ஆசிரியை

/

விவசாய கனவை விதைக்கும் வேளாண் ஆசிரியை

விவசாய கனவை விதைக்கும் வேளாண் ஆசிரியை

விவசாய கனவை விதைக்கும் வேளாண் ஆசிரியை


UPDATED : மார் 11, 2024 12:00 AM

ADDED : மார் 11, 2024 10:40 PM

Google News

UPDATED : மார் 11, 2024 12:00 AM ADDED : மார் 11, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதக்:
இளம் தலைமுறையினரின் மனங்களில் விவசாய கனவை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் பெண் விரிவுரையாளர்.கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம்மா. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீலம்மா, தார்வாடில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பெங்களூரில் உள்ள ஜி.கே.வி.கே.,யில் வேளாண் வணிக மேலாண்மையில் எம்.பி.ஏ., முடித்தார்.இளம்தலைமுறையினர் மனங்களில் விவசாய கனவை விதைக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். விவசாயத்தை எப்படி லாபகரமாக மாற்றுவது என்று வேளாண் வணிகம் கற்க வரும் மாணவர்களுக்கு உரையுடன் எப்போதும் ஊக்கம் அளித்து வருகிறார்.யோகா
இந்தியாவின் அடையாளமான விவசாயத்துடன் யோகாவும், ஆன்மிகமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது அவரது நிலைப்பாடு.விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் நாம் ஐந்து கூறுகளுடன் கலக்கிறோம். விவசாயத்தின் மூலம் மண், காற்று, நீர், ஒட்டுமொத்த இயற்கையும் காக்கப்படும் என, மாணவர்களுக்கு கூறி வருகிறார்.முதலில் விவசாயம் என்பது உணவை குறிக்கிறது. ஆனால் இப்போது விவசாயம் மாறி, அதுவே உலகின் சாபக்கேடாக மாறிவிட்டது. தொழிலில் நேர்மையுடன் முன்னேற வேண்டும். ரசாயனங்களை ஒதுக்கிவிட்டு, குறைந்த செலவில் பாரம்பரிய விவசாயத்தின் சாத்தியக்கூறுகளை மாணவர்களுக்கு விளக்கி வருகிறார்.இதுகுறித்து நீலம்மா கூறியதாவது:
விவசாயத்தின் பெருமையை மீண்டும் கொண்டு வருவதே எனது நோக்கம். அந்த வகையில் தொழில்நுட்பத்தையும், நம் தேசிய கலாசாரத்தையும் கலந்து விவசாயத்தை லாபகரமாக மாற்றுவது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறேன்.உற்சாகமூட்டும் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, பல இளைஞர்கள் இப்போது லாபகரமான விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய பெரும்பாலான இளம் பெண்கள் கற்பனை உலகில் வாழ்கின்றனர். பெரும்பாலான இளம் பெண்களால், இந்த உலகத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்கள், மாயையின் உலகத்தில் இருந்து யதார்த்தத்திற்கு வர வேண்டும்கலாசாரம்
பெண்கள் கலாசாரத்தின் பிரதிபலிப்பு. ஆனால் இன்று பல பெண்களுக்கு இது காலாவதியான பேஷனாக&' தெரிகிறது. நாம் நெற்றியில் குங்குமப் பொட்டு அணிவதன் பின்னணியில், அறிவியல் காரணங்களும் உள்ளன.நம் கலாசாரம் குறித்து இளம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் பண்பட்டால் குடும்பம் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us