UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 17, 2024 09:20 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில், 1.16 லட்சம் சதுர அடியில், புதிய மையம் நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.இம்மையம் வாயிலாக, வேளாண் உணவு தொழில்நுட்பம், பசுமை உயிரி தொழில்நுட்பம், உயிரி தொகுப்பியல் மற்றும் உயிரி தகவலியல், உயிர் வளப்பயன்பாடு போன்ற முக்கிய துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தாவரங்களிலுள்ள மருந்து தன்மைகளை கண்டறிதல், பருவமாற்றங்களை தாங்கி வளரும் ரகங்கள் உருவாக்குதல் என, பல்நோக்கு மையமாக செயல்படும் என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திறப்பு விழா நிகழ்வில், பல்கலை தரப்பில் துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், மைய இயக்குனர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.