UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 12:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர்:
அசோக் நகர், ஆஞ்சநேயர் பக்த சபா அறக்கட்டளை சார்பில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கும், 'குரு விருக் ஷா' ஐ.ஏ.எஸ்., அகாடமி, அசோக் நகரில் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தில், வரும் குரூப்-1 தேர்வுக்கு தொடர் பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பிற்கு தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான தேர்வு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதால், வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 9363923451 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், hyyps://forms.gle/Zikfv6RsjNgUGZUm8 என்ற லிங்க் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.