UPDATED : மே 22, 2024 12:00 AM
ADDED : மே 22, 2024 10:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :
சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இங்கு மாணவர்கள் சேர்க்கைக்கான பாட பிரிவுகள், பிற சலுகைகள் குறித்த விளம்பர பலகை, அரசு ஐ.டி.ஐ., நிர்வாகம் சார்பில் சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் நேற்று கட்டப்பட்டது. குறிப்பாக கலெக்டர் அலுவலக வளாகத்திலும், இந்த விளம்பர பலகை கட்டினர். இப்பணியை அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களே மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.