UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கி, குழந்தைகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் அலகின் வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய நான்கு மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் எட்டு பேர் என, 12 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
அவர்களின் மேற்படிப்புக்காக, சமூக பொறுப்பு நிதியிலிருந்து, தலா 50,000 ரூபாய் நிதியை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்த, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் வழங்கினார்.