UPDATED : ஜூன் 10, 2024 12:00 AM
ADDED : ஜூன் 10, 2024 06:42 AM
மதுரை:
சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கம் செய்தார்.
அதன் விவரம்:
முத்தனேந்தலில் அரசு பொது நுாலகம் இருந்தது. மதுரை - ராமேஸ்வரம் நான்குவழிச்சாலைக்காக முத்தனேந்தல் ஊராட்சி அலுவலகம் இருந்த இடத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) 2017 ல் கையகப்படுத்தியது. ஊராட்சி அலுவலகம் நுாலக கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. நுாலகம் மூடப்பட்டது.
இதுவரை நுாலகத்தை திறக்க நடவடிக்கை இல்லை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுாலகத்துறை இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். வாகுடியில் அரசு நிலம் உள்ளது. அங்கு நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.