UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:28 AM
சென்னை:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக, 25 மாணவர்கள் தமிழக அரசால் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான வழிகாட்டுதலை வழங்க, நான் முதல்வன் என்ற திட்டத்தை, 2022 மார்ச்சில் முதல்வர் ஸ்டாலின் துவக்கினார். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்களுக்கு, திறமையை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களை, வெளிநாட்டிற்கு அனுப்பி பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட, 25 மாணவர்கள் லண்டன் சென்றனர். இவர்களை பாராட்டி, சிறகுகள் விரியட்டும் மகிழ்ச்சி என, முதல்வர் ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.