UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 08:30 AM
திண்டுக்கல்:
குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதான பத்ம விருது என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன்,பத்ம ஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 விருதுகள் வழங்கப்படுகிறது.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை,தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் விளையாட்டு துறை சார்பாக பத்ம விருது வழங்கப்படுகிறது. 2024ல் பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம்,இதர விவரங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக செப் 9ல் உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு,இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம் கலெக்டர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு திண்டுக்கல் 74017 03504 என்ற எண்ணில் அணுகலாம்.