UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 09:16 AM
ஈரோடு:
மத்திய அரசின் ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுக்கு, நான் முதல்வன் திட்டத்தில், போட்டி தேர்வு வாயிலாக தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு, தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்(டி.என்.எஸ்.டி.சி) சார்பில் ரயில்வே, வங்கி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத்தேர்வு, ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே பணி சிறப்பு பயிற்சி நுழைவு தேர்வு ஈரோடு செங்குந்தர் பள்ளியிலும், வங்கி பணி சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு கலைமகள் பள்ளியிலும் நடந்தது.ரயில்வே பணி நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த, 383 பேரில், 229 பேரும், வங்கி பணி நுழைவுத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த, 224 பேரில், 143 பேர் என, 372 பேர் தேர்வெழுதினர். 235 பேர் ஆப்சென்ட் ஆகினர்.