sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அலைபேசியை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்

/

அலைபேசியை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அலைபேசியை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அலைபேசியை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்


UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM

ADDED : ஜூலை 27, 2024 10:16 AM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM ADDED : ஜூலை 27, 2024 10:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் :
அலைபேசி, சமூக வலைதளங்களை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் அறிவுரை வழங்கினார்.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகளின் துவக்க விழா நடந்தது.

கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், துணைத்தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். டீன் அழகேசன் வரவேற்றார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு துவக்கி வைத்தார்.

மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், சாலைபாதுகாப்பு, போதை பழக்கத்தில் மீட்பு கிளப்களை துவக்கி வைத்து பேசியதாவது:



நீங்கள் பட்டதாரி என்பதைவிட, எப்படி நடக்கிறோம், எப்படி வாய்ப்புகளை பயன்படுத்துறோம், எப்படி முன்னேறுகிறோம் என்பதே முக்கியம். இளைஞர் சமுதாயம் சில தீய பழக்கவழக்கங்களால் பாதிக்கிறது. இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய சவால், அலைபேசி, சமூக வலைதளங்கள்தான். அவற்றை நீங்கள் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்தாண்டு போதை பொருள் சம்பந்தமாக 122 வழக்குகள் பதியப்பட்டு, 14 வாகனங்கள் பறிமுதல், ரூ. 14 லட்சம் மதிப்புள்ளபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, 126 கடைகள் மூடப்பட்டுள்ளன, என்றார்.

மாணவர் சுந்தரபாண்டி, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது மாணவர்களின் கடமை என்ற தலைப்பில் பேசினார். துணை கமிஷனர்கள் குமார், காரட் கருண் உதேவ்ராவ் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ரஞ்சித் குமார், சிலம்பரசன் தொகுத்து வழங்கினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us