UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 09:26 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 25வது கார்கில் வெற்றி தினவிழா அனுசரிக்கப்பட்டது. 5 தமிழ்நாடு என்.சி.சி., கமாண்டிங் ஆபீஸர் கர்னல் ஜோஷி, கார்கில் போர் வரலாற்றை மாணவர்களுக்கு விளக்கினார்.
அப்போது அவர், ராணுவ வீரர்கள் வெற்றுக்காசோலை போன்றவர்கள். போர் முனையில் எப்போது வேண்டுமானாலும், அவர்களின் உயிர் நாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்படும், என உருக்கமாக பேசினார்.
கார்கில் போரில் தன் உயிர் நண்பரை, கண் முன்னே பறிகொடுத்த நினைவுகளை, சுபேதர் மேஜர் பரத்சிங் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். இதில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர் நல மைய டீன் மரகதம், பல்கலை என்.சி.சி., அதிகாரி மேஜர் மனோன்மணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

