sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவள்ளுவர் இருக்கை மலேஷிய பல்கலையுடன் ஒப்பந்தம்

/

திருவள்ளுவர் இருக்கை மலேஷிய பல்கலையுடன் ஒப்பந்தம்

திருவள்ளுவர் இருக்கை மலேஷிய பல்கலையுடன் ஒப்பந்தம்

திருவள்ளுவர் இருக்கை மலேஷிய பல்கலையுடன் ஒப்பந்தம்


UPDATED : ஆக 21, 2024 12:00 AM

ADDED : ஆக 21, 2024 10:49 AM

Google News

UPDATED : ஆக 21, 2024 12:00 AM ADDED : ஆக 21, 2024 10:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
அரசு முறை பயணமாக வந்துள்ள மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மலேஷிய பல்கலையில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம், மூன்று நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டில்லி வந்தார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

கூட்டறிக்கை

மலேஷியாவின் துன்கு அப்துல் ரஹ்மான் பல்கலையில், ஆயுர்வேத இருக்கை அமைப்பது, மலேஷிய பல்கலையில், திருவள்ளுவர் இருக்கை அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய நாடான மலேஷியாவுடன், இந்தியாவுக்கு நீண்ட காலமாக, கலாசார மற்றும் பாரம்பரிய உறவு உள்ளது.

இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட பொருளாதார உறவும் சிறப்பாக உள்ளது. இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்லும் வகையில், பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர், நிதி தொழில்நுட்பம், ராணுவ தளவாடங்கள், செயற்கை நுண்ணறிவு என, பல துறைகளிலும் இணைந்து செயல்பட உள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவதற்காக கவுன்சில் உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்பு

இருதரப்பு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். தாராள வர்த்தக ஒப்பந்தத்தையும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் வகையில், மலேஷியாவில் இந்தியர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பணியாற்றும் இந்தியர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும். பயங்கரவாதத்தை வலுவாக எதிர்ப்பதில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மிகவும் சிறப்பான கலாசார, நாகரிக வரலாற்றைக் கொண்ட நாடு. பல்வேறு கலாசாரங்கள், மதங்கள் உள்ள இந்தியாவுடனான நட்புறவு மிகவும் வலுவாக உள்ளது. மிகச் சிறந்த நட்பு நாடு என்பதற்கு உதாரணமாக இந்தியா உள்ளது. அதனால்தான், தொழில், வர்த்தகத்துக்கு அப்பாற்பட்டு, இந்தியாவுடன் பல துறைகளில் இணைந்து செயலாற்றி வருகிறோம்.






      Dinamalar
      Follow us