UPDATED : அக் 25, 2024 12:00 AM
ADDED : அக் 25, 2024 04:48 PM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 31வது பட்டமளிப்பு விழா நாளை (அக்.,26) நடக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, 571 பேருக்கு பட்டங்களை வழங்குகிறார்.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குனர் என்.வி.சலபதிராவ் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பல்கலையில் நடந்தது. துணைவேந்தர் சந்திரசேகரிடம் பல்கலையின் நிதிநிலை மோசமாக இருப்பது குறித்தும், ம.சு.பல்கலை நடத்த இருந்த செட் தேர்வு தொழில்நுட்ப குளறுபடி காரணமாக ஆறு மாதத்திற்கும் மேலாக நடத்தப்படாமல் இருப்பது குறித்தும், ஏ.பி.வி.பி., தலைவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்ததற்கு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
பட்டமளிப்பு விழா தவிர வேறு எந்த கேள்விகளையும் கேட்காதீர்கள் என துணைவேந்தர் பதிலளிக்க மறுத்தார்.