அர்ப்பணிப்போடு செயல்பட்டால் ஆசிரியரின் கல்வித்தரம் மேம்படும்
அர்ப்பணிப்போடு செயல்பட்டால் ஆசிரியரின் கல்வித்தரம் மேம்படும்
UPDATED : நவ 21, 2024 12:00 AM
ADDED : நவ 21, 2024 11:56 AM
சேலம்:
அர்ப்பணிப்போடு செயல்பட்டால், ஆசிரியரின் கல்வித்தரம் மேம்படும் என துணைவேந்தர் ஜெநாதன் பேசினார்.
சேலம் பெரியார் பல்கலையில், உள்தர உறுதிப்பிரிவு மற்றும் வணிகவியல் துறை இணைந்து, கற்பித்தல் மற்றும் கற்றலில் சிறந்து விளங்குதல், ஒரு இடைநிலை ஆசிரிய மேம்பாட்டுத்திட்டம் என்ற தலைப்பில், ஐந்து நாள் ஆசிரிய மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
முகாமை, பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் துவக்கி வைத்து பேசியதாவது:
ஆசிரியர்கள் நாட்டிற்கு முன் மாதிரியாகவும், சமூகத்துக்கு திரும்ப கொடுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை பெறுவதால், இப்பணி திருப்திகரமாக உள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய இரு துறையிலும் அதிக திறமை பெற்றிருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு செயல்பட்டால் மட்டுமே ஆசிரியரின் கல்வித்தரம் மேம்படுத்த முடியும்.
இவ்வாறு பேசினார்.
திண்டுக்கல், காந்திகிராம பல்கலை பொருளியல் துறைத்தலைவர் ராஜேந்திரன், பெரியார் பல்கலை வணிகவியல் துறை தலைவர் கிருஷ்ணகுமார், மேலாண்மைத்துறை தலைவர் யோகானந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.