UPDATED : டிச 11, 2024 12:00 AM
ADDED : டிச 11, 2024 08:19 AM
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் துவரை சாகுபடிக்கான பண்ணைப் பள்ளிக்கான பயிற்சி முகாம், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா மற்றும் காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய வேளாண்மை துணை இயக்குனர், துவரை சாகுபடி பரப்பினை அதிகரிக்க மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில், பயிர் வகைக்கான மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தார்.
வேளாண் துறை சார்ந்த உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்து, விதை குறித்தான மானிய திட்டங்களை வேளாண் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்திருந்தனர்.