UPDATED : டிச 12, 2024 12:00 AM
ADDED : டிச 12, 2024 09:56 AM
கோவை:
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு, வேளாண் பல்கலையின், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
பசுமையான எதிர்காலம் என்ற கருப்பொருளில் நடந்த சைக்கிள் பேரணியை, பொறியியல் கல்லூரி டீன் ரவிராஜ் துவக்கி வைத்தார்.
கார்பன் உமிழ்வைக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு சைக்கிளைப் பயன்படுத்துவதன் வாயிலாக ஆரோக்கிய வாழ்வைப் பேணுவது, மரபுசார்ந்த எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவற்றை வலியுறுத்தியும், பேரணி நடந்தது.
ஹன்டர் டக்ளஸ் இந்தியா, ஆட்டோ பிரசிங்ஸ் முதன்மைச் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். என்.எஸ்.எஸ்., அலுவலர் பழனிச்செல்வம், பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.