UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:26 AM
கோவை:
காருண்யா நிகர்நிலை பல்கலையில், சர்வதேச கணினி மற்றும் அறிவார்ந்த உண்மை தொழில்நுட்பங்கள் என்ற மாநாடு நடந்தது.
ஆஸ்திரேலியா டீக்கின் பல்கலை பேராசிரியர் காங்க் லி, இங்கிலாந்து டர்ஹாம் பல்கலை பேராசிரியர் அனிஷ் ஜிந்தால் மற்றும் துறை தலைவர் ஹெலன் தாம்சன், ஐ.ஐ.டி., புவனேஸ்வர் இயக்குனர் ஆஷிஷ் கோஷ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிபுணர்கள் உரையாற்றினர்.
மாநாட்டில் ஐ.ஒ.டி., கண்டுபிடிப்புகள், சைபர் பாதுகாப்பு, மெஷின் லேர்னிங், ஆக்மெண்ட் ரியாலிட்டி மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் போன்ற ஏழு மையத் துறைகளில் தொழில்துறை நிபுணர்களின் சிறப்பு அமர்வுகள் இடம்பெற்றன.
உலகளாவிய ஆய்வாளர்களின், 609 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், மிகச்சிறந்த இரண்டு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.