UPDATED : டிச 27, 2024 12:00 AM
ADDED : டிச 27, 2024 12:12 PM
பெரும்பாக்கம்:
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில், நடமாடும் இலவச கணினி பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. இந்த இலவச கணினி பயிற்சி வகுப்பை, பள்ளிக்கரணை காவல் சரக துணை கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்து, மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த பயிற்சி வகுப்பு, நடமாடும் பேருந்தில் நடக்கிறது. இதில் சேரும் மாணவர்கள், 12 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 16 கணினிகள் உள்ளன. ஒரு மாணவருக்கு ஒரு மணி நேரம் கணினி பயிற்சி அளிக்கப்படும்.
பெரும்பாக்கத்தை தொடர்ந்து, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், நாவலுார், படூர், கோவளம் ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற குடியிருப்புகளில், இந்த இலவச கணினி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.