UPDATED : ஜன 28, 2025 12:00 AM
ADDED : ஜன 28, 2025 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும், ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, சீருடைகள் வழங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும், ஆஷா பணியாளர்களின் சேவைகளை பாராட்டி, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, தனது சொந்த செலவில், சீருடைகள் (புடவைகள்) வழங்கினார். பின்னர், அவர்களை பாராட்டி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ரொமேனோ,சிந்து, ராதாமுத்து உட்பட சுகாதார நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளையின் நிர்வாகி ரமேஷ்குமார் செய்திருந்தார்.