UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:08 AM
கோவை:
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் மற்றும் இஸ்ரேல், ஏரியல் பல்கலை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர் பரிமாற்ற திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்குழு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளைத் தலைவர்களான சுந்தர், நரேந்திரன், ராமகிருஷ்ணா, அலமேலு, கல்வி இயக்குனர் சவுந்தரராஜன், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்தனர். கல்லுாரியின் சைபர் பாதுகாப்பு மையம், ஸ்மார்ட் தொழிற்சாலை, தொழில் 4.0, எலக்ட்ரிக் மொபைலிட்டி, ஐ.டி., வகுப்பறைகள் மற்றும் ஸ்டார்ட்அப் இன்குபேஷன் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி ஆய்வகங்களையும், இந்தக் குழு பார்வையிட்டது.