UPDATED : மார் 29, 2025 12:00 AM
ADDED : மார் 29, 2025 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து சத்துணவு,
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணிமாலா பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, ஓய்வூதியத்துடன் டீ.ஏ., சேர்த்து வழங்க வலியுறுத்தினர். நிர்வாகிகள் வேலுசாமி, குமார், தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.