sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : மே 22, 2025 12:00 AM

ADDED : மே 22, 2025 08:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2025 12:00 AM ADDED : மே 22, 2025 08:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி :
சி.பி.எஸ்.இ., பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., தேர்வு முறைக்கு மாறிய அரசு பள்ளிகள் முதல் முறையிலேயே சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், கல்வித்துறை சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தேர்வு நேரத்தில் ஆசிரியர்களை மாற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாணவர்கள் நன்கு புரிந்து கற்க வேண்டிய முறையாகும். அவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கும், கற்றல் முறையை எளிதாக்குவதற்கும் தனிச்செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும். செயல்படாத மற்றும் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் பள்ளிகளை தேர்வு செய்து, விருது வழங்குவது போல, அதிக மாணவர்கள் சேர்க்கும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தினால், அரசு பள்ளிகளின் தரம், மாணவர் சேர்க்கை உயரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us